அதிர்ச்சி... கங்கை நதியில் மீண்டும் குப்பைகள் மிதக்கும் காட்சி!

 

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பாயும் புனித கங்கை நதி, சமீபத்தில் தொடர் தூய்மைப் பணிகளுக்குப் பிறகு படிகம் போல் தெளிந்து ஓடியது. இந்த இயற்கையான தூய்மைப் பொலிவு பொதுமக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஆற்றில் மீண்டும் குப்பைகள் மற்றும் கழிவுகள் மிதந்துவரும் அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சுமார் 19 நாட்களுக்கு மேலாகத் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நதியின் நீர் சுத்திகரிக்கப்பட்டிருந்த நிலையில், குறுகிய காலத்திற்குள் நதி மீண்டும் மாசடைந்துள்ள காட்சி பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

புனிதமாகக் கருதப்படும் கங்கை நதியில் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்குவது நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

நதியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கத் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.