நெல்லையில் அதிர்ச்சி: குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது!

 

திருநெல்வேலி பகுதியில் குழந்தைகளுக்குப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துப் பொது அமைதிக்குப் குந்தகம் விளைவித்த நபர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி டவுண் பாரதியார் தெருவைச் சேர்ந்த செய்யது பீர்முகமது (30) என்பவர். இவர் மீது, குழந்தைகளைப் பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்திய புகாரின் பேரில் கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கஅனைத்து மகளிர் காவல் ஆய்வாளரின் பரிந்துரையின் படி மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில், செய்யது பீர்முகமது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாதுகாப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.