அதிர்ச்சி... விவேகானந்தா கல்வி நிறுவன உரிமையாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

 

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள பிரபல விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் சக்திவேல், ஈரோட்டில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு இரயில் நிலையப் பகுதிக்கு அருகே தண்டவாளத்தில் சக்திவேல் உடல் சிதறிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

கல்வி நிறுவனங்களின் உரிமையாளரான சக்திவேல் இந்த விபரீத முடிவை எடுத்ததற்கான பின்னணி என்ன, குடும்பப் பிரச்சினையா அல்லது தொழில் ரீதியான நெருக்கடியா என்பது குறித்துப் போலீசார் தற்பொழுது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்தூர் பகுதியில் கல்விப் பணியாற்றி வந்த முக்கியப் பிரமுகர் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவரது கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.