பிரியாணி பாத்திரத்தில் இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் - திடுக்கிடும் தகவல் வெளியீடு!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஹயத்துன்நிஷா என்ற பெண்ணைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிப் பிரியாணி பாத்திரத்தில் அடைத்த கொடூரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள காதலர்கள் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான மணிகுதீன் லஸ்கர் மற்றும் அவரது காதலி பகபதி மாஜி ஆகியோர் மணிப்பூர் மாநிலத்தில் வைத்துப் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, தங்களுக்கு இடையே இருந்த கள்ளக்காதலைத் தொடர்ந்துகொண்டு தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஹயத்துன்நிஷா தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்து இந்தக் கொலையை அரங்கேற்றியதாகக் கைதான ஜோடி ஒப்புக்கொண்டுள்ளது.
கொலையைச் செய்தபின் ஆதாரங்களை மறைப்பதற்காக உடலைத் துண்டு துண்டாக வெட்டிப் பிரியாணி பாத்திரத்தில் அடைத்த இவர்களின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.