அதிர்ச்சி... கடலூரில் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது!
Aug 7, 2026, 17:20 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் பள்ளியில், 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் அகஸ்டின் (24) பாலியல் தொல்லை அளித்துள்ளார். பள்ளியில் நடந்த இந்த அநீதி குறித்துச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து, இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
விவகாரத்தை அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து, ஆசிரியர் அகஸ்டினைத் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், ஆசிரியர் அகஸ்டினைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.