அதிர்ச்சி வீடியோ... சாலைத் தடுப்பில் மோதி 2 துண்டாக உடைந்த பேருந்து – ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்!
கேரள மாநிலம் மலப்புரத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் பலமாக மோதி இரண்டு துண்டாக பிளந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்த வேளையில், தனியார் பேருந்து ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் இருந்த தடுப்பின் மீது பலமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் பேருந்து இரு துண்டாக உடைந்து, சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் சிக்கி பயணிகள் பலர் படுகாயமடைந்தனர்.
விபத்தின் தீவிரத்தால் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து இரண்டு துண்டாக பிளந்து கவிழ்ந்த பதற வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.