பதற வைக்கும் வீடியோ... காங்கோவில் ராணுவ விமான விபத்து - 2 ஜெனரல்கள் உள்பட 14 பேர் பலி!

 

காங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்த ராணுவ விமான விபத்தில், இரண்டு மூத்த ராணுவ ஜெனரல்கள் உள்பட விமானத்தில் பயணித்த 14 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிக்விட் பகுதியிலிருந்து தலைநகர் கின்ஷாசாவிற்குச் சென்ற ராணுவ விமானம், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கெங்கே பகுதிக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ராணுவ நீதிமன்றத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாய் மற்றும் தணிக்கை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் விமானக் குழுவினர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்கான துல்லியமான காரணங்கள் என்ன என்பது குறித்து அந்நாட்டு ராணுவம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.