அதிர்ச்சி வீடியோ... திவ்யா சத்யராஜ் மீது தவெகவினர் செருப்பு வீச்சு.. ‘விஜய் மனைவி சங்கீதாவுக்கும் மரியாதை வேண்டும்’ - சீறிய திவ்யா!

 

திமுக ஐடி விங் மாநிலத் துணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அவர் மீது செருப்பு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திவ்யா சத்யராஜ் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், அவருக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, அவர் மீது செருப்பு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இச்சம்பவம் அங்கிருந்த திமுக தொண்டர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/RC2gS1NUa1Q?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/RC2gS1NUa1Q/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் தங்கள் கருத்துகளைப் பேசுவதற்காகவும், அரசியல் களத்தில் இறங்குவதற்காகவும் இத்தகையத் தாக்குதல்களைச் சந்திப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இது ஒரு அநாகரிகமான செயல். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சித் தொண்டர்களுக்குப் பெண்களை எப்படிக் கண்ணியமாக மதிக்க வேண்டும் என்பதை முதலில் அறிவுறுத்த வேண்டும்.”

“அனைத்துப் பெண்களையும் போல, விஜய் அவர்களின் மனைவி சங்கீதாவுக்கும் உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதே கண்ணியம் மற்ற கட்சிப் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும்,” எனத் தனது அறிக்கையில் மிகவும் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், திமுக மற்றும் தவெக தொண்டர்களுக்கு இடையே நிலவும் இந்த மோதல் போக்கு, தேர்தல் நாளன்று ஏதேனும் சட்டம் ஒழுங்குப் பாதிப்புகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, செருப்பு வீசிய நபர்களைத் தேடி வருகின்றனர்.