பதற வைக்கும் வீடியோ... தம்பதியை கடித்து குதறிய பிட்புல் நாய்!

 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் வீடு வாங்குவதற்காகச் சென்ற தம்பதியினரை, ஆபத்தான பிட்புல் நாய் கொடூரமாகக் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் தம்பதி இருவர் புதிய வீடு வாங்குவதற்காக ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீட்டின் வாசலில் இருந்து அவர்கள் காலிங் பெல்லை அழுத்திய சில நொடிகளிலேயே, வீட்டின் உள்ளே இருந்து சீறிக்கொண்டு வெளியே வந்த பிட்புல் நாய் எதிர்பாராத விதமாக இருவர் மீதும் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/bmauoZwotew?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/bmauoZwotew/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

பிட்புல் நாய் விடாமல் இருவரையும் பலமுறை கடித்து குதறியதில், அவர்களின் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயங்கள் மற்றும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. இக்கொடூர தாக்குதல் தொடர்பான பதறவைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆபத்தான நாய் இனங்களை வீட்டில் வளர்க்கும்போது உரியப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.