அதிர்ச்சி வீடியோ... ரயிலில் டிரெஸ்ஸைக் கிழித்துக்கொண்டு டிடிஆர் மீது பாலியல் புகாரளித்த இளம்பெண்!

 

இப்படி எல்லாம் கூட செய்வாங்களா? என்று அந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ரயிலில் பயணம் செய்யும் போது உரிய டிக்கெட் இருக்கிறதா என்று கேள்வி கேட்ட பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நாடகமாடிப் பொய் புகார் அளித்த பெண்ணின் உண்மை முகம் சிசிடிவி மற்றும் செல்போன் வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் உரிய பயணச்சீட்டைக் கேட்க, அவரிடம் டிக்கெட் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து விதிமுறைகளின்படி பரிசோதகர் அபராதம் வசூலிக்க முயன்றுள்ளார்.

View this post on Instagram

A post shared by INDIANS (@indians)

அபராதம் செலுத்த மறுத்த அந்தப் பெண், திடீரெனத் தனது ஆடைகளைத் தானே கிழித்துக் கொண்டு, ரயில்வே பரிசோதகர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகக் கூறி காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரைப் பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்துப் புகாரைப் பெற்ற ரயில்வே காவல்துறையினர், உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் அங்கிருந்தோரின் செல்போன் வீடியோக்களையும் ஆய்வு செய்தனர்.

செல்போன்களில் பயணிகள் எடுத்த காணொளி ஆதாரங்களின் மூலம் அந்தப் பெண் கூறிய புகாரில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியானதை அடுத்து, காவல்துறையினர் அப்பெண்ணைக் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். தவறுதலாகப் பரிசோதகர் மீது பழி சுமத்த முயன்ற இந்தச் செயலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.