undefined

ஷாக்கிங் வீடியோ.. கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் இளம்பெண் அட்டகாசம் !!

 

உலகின் எந்த மூளையில் நடக்கும் சம்பவங்களையும் இப்போது வெளிச்சம் போட்டு காட்டுகிறது சமூக ஊடகங்கள். அந்த வகையில் பலவித வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் மகாராஷ்டிராவில் சாலையில் அரைகுரை ஆடையுடன் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் செய்த ரகளை வைரலாகி வருகிறது.

சாலை தடுப்புகளை கீழே தள்ளி விடுகிறார். பல பெண்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர் யாருக்கும் அடங்குவதாகத் தெரியவில்லை. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு அங்கு போலீசார் வந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து பலர் அந்த பெண்ணுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்கிறார்கள். 

இந்த வீடியோவை @kmrvikash11 என்ற ட்விட்டர் பயனர் பகிர்ந்துள்ளார். இதை பகிர்ந்த அந்த பயனர், காதலில் கிடைத்த தோல்வியால் பெண் செய்த கலாட்டா.. இது குவாலியரின் பூல் பாக் சந்திப்பில் நடந்த சம்பவம், என்று எழுதியுள்ளார். எனினும் இவ்வாறு அந்த இளம்பெண் செய்தது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.