அதிர்ச்சி... ஒரே கயிற்றில் தொங்கிய காதல் ஜோடி - திருமணமான இளைஞருடன் இளம்பெண் தற்கொலை!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மாலா பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், இளம் காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
மாலாவைச் சேர்ந்த மில்னா (24) என்ற பெண்ணுக்கும், ஸ்ரீஜித் (30) என்ற இளைஞருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் காதல் இருந்து வந்துள்ளது. மில்னாவிற்கு அவரது குடும்பத்தினர் சமீபத்தில் வேறொரு இடத்தில திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த மில்னா, கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனார். இது குறித்து அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
போலீசாரின் தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில், இன்று மாலாவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மில்னா மற்றும் ஸ்ரீஜித் ஆகிய இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் மீட்கப்பட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த ஸ்ரீஜித் குறித்துப் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன:
ஸ்ரீஜித்திற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகியுள்ளது. ஸ்ரீஜித்தின் இரண்டாவது மனைவி, குடும்பப் தகராறு காரணமாக ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று, தற்போது மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டாவது மனைவி மருத்துவமனையில் இருக்கும் போதே, ஸ்ரீஜித் தனது காதலி மில்னாவுடன் தலைமறைவாகி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காதலியின் திருமண ஏற்பாடுகளால் ஏற்பட்ட பயம் அல்லது ஸ்ரீஜித்தின் முந்தைய திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.