தென் ஆப்பிரிக்காவில் தங்கும் விடுதியில் சரமாரித் துப்பாக்கிச்சூடு... 11 பேர் பலி!
தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ப்ரிட்டோரியாவின் மேற்கே உள்ள சால்ஸ்வில் பகுதியில் செயல்பட்டு வந்த தங்கும் விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில், ஒரு சிறுவன் மற்றும் இரு சிறுமிகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சால்ஸ்வில் பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்குத் துப்பாக்கிகளுடன் வந்த மூன்று மர்ம நபர்கள், அங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். பலியானவர்களில் 3 வயதுச் சிறுவன், 12 வயதுச் சிறுவன், 16 வயதுச் சிறுமி ஆகியோரும் அடங்குவர். தாக்குதல் நடைபெற்ற இந்த விடுதியில் சட்டவிரோதமாக மது விற்பனைக் கூடம் செயல்பட்டு வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலின் நோக்கம் குறித்து போலீசார் உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய மூவரைத் தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களில் ஒன்றாக இந்தக் கொடூரத் தாக்குதல் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!