undefined

 பல்கலைக்கழகத்திற்கு  வெளியே துப்பாக்கிச்சூடு... 4 பேர் படுகாயம்... அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்!

 

  

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹோவார்டு பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் விழா நிகழ்ச்சிக்கு மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் நிலையில், நேற்றிரவு திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. பல்கலைக்கழகத்தின் வெளிப்புற பகுதியில் இரவு 8.23 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 4 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியை முற்றுகையிட்டு பாதுகாப்பு பலப்படுத்தினர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. சம்பவத்தால் வாஷிங்டன் நகரத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!