“சும்மாயிரு ஆத்தா...” - த்ரிஷாவுக்கு நன்றி சொல்லும் தவெக தொண்டர்கள்!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் கவனம் முழுவதும் நடிகை த்ரிஷாவின் பக்கமே திரும்பியிருந்தது.
கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளுக்குப் பிரத்யேகப் புகைப்படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்த த்ரிஷா, இந்த ஆண்டு மௌனம் காத்தது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் த்ரிஷாவை இணைத்துச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் பரவி வந்தன. குறிப்பாக, விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், இதுபோன்ற தனிப்பட்ட சர்ச்சைகள் அவரது அரசியல் பிம்பத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தவெக தொண்டர்கள் அச்சமடைந்து வந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துப் பதிவிடும் த்ரிஷா, இந்த ஆண்டும் அதுபோல ஏதேனும் பதிவிட்டால் மீண்டும் தேவையற்ற சர்ச்சைகள் கிளம்பும் என்று தவெகவினர் அச்சத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், நேற்று (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளுக்குத் த்ரிஷா எந்தவொரு வாழ்த்துப் பதிவையும் வெளியிடவில்லை. மேலும், அவர் விஜய்யை இன்ஸ்டாகிராமில் 'அன்ஃபாலோ' செய்து விட்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், த்ரிஷா எப்போதுமே விஜய்யின் அதிகாரப்பூர்வ கணக்கைப் பின்தொடரவில்லை என்பதே உண்மைத் தரவு. த்ரிஷா வாழ்த்து தெரிவிக்காமல் மௌனம் காத்ததன் மூலம், சமீபகாலமாக எழுந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கருதி தவெக தொண்டர்கள் தற்பொழுது நிம்மதியடைந்துள்ளனர்.
மறுபுறம், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுக்குப் பொதுவெளியிலோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ எந்தவொரு வாழ்த்தும் தெரிவிக்காதது தற்பொழுது இணையத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திரைத்துறையில் நிலவிய 'சூப்பர் ஸ்டார்' போட்டி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் காரணமாகவே ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காமல் தவிர்த்துள்ளார் என்றும், இது விஜய் மீதான அவரது அதிருப்தியைக் காட்டுவதாகவும் நெட்டிசன்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். த்ரிஷாவின் மௌனம் தொண்டர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ள அதே வேளையில், ரஜினியின் அமைதி இணையவாசிகள் இடையே காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.