செம மாஸ்... 6,7 வயது சகோதரர்கள் குட்டி சைக்கிளில் கின்னஸ் சாதனை!  

 

 

உலகின் மிகச்சிறிய பென்னி-பார்த்திங் சைக்கிளை ஓட்டி 6 மற்றும் 7 வயது உடன்பிறப்புகள் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த 7 வயது ப்ளோ உட்வர்ட் மற்றும் அவரது 6 வயது சகோதரர் பின் உட்வர்ட் ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

லண்டனில் நடைபெற்ற சிட்டி ஆப் லண்டன் நாக்டூர்ன் நிகழ்வில், வெறும் 62 சென்டிமீட்டர் உயரமும் 29 சென்டிமீட்டர் முன் சக்கர விட்டமும் கொண்ட லிட்டில் பீ என்ற சிறிய சைக்கிளில் இருவரும் ஏறி 100 மீட்டர் தூரத்தைத் தடுமாற்றமின்றி ஓட்டி முடித்தனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் போல்வெல் இந்தச் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.

உட்வர்ட் குடும்பத்தினருக்கு பென்னி-பார்த்திங் சைக்கிள் ஓட்டுவது புதிதல்ல; இவர்களின் தாயார் ஜூலி உட்வர்ட் ஏற்கெனவே பெண்களுக்கான அதிவேக 1 கிலோமீட்டர் சாதனையைப் படைத்துள்ளார்