சுனாமி அறிகுறியா? ஆழ்கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய 30 அடி நீளமுள்ள அரிய வகை மீன்கள்... வைரல் வீடியோ!
கடலில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வசித்து வந்தாலும் நம் கண்ணுக்கு புலப்படுபவை மிக சொற்பமே. கடலில் ஆயிரக்கணக்கான அடிக்கு கீழே பல அரிய வகை மீன்கள் வசித்து வருகின்றன. இவை பெரும்பாலும் கடலில் ஏதாவது இயற்கை பேரிடர் ஏற்பட்டால் மட்டுமே அதனை உணர்த்தும் வகையில் வெளியில் வருவதுண்டு. இவை அனைத்துமே மீன்பிடிப்பவர்களின் வலைகளில் சிக்காது.
கடற்கரைக்கு அருகில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த 2 பெண்கள் தண்ணீரில் ஏதோ மின்னுவதை கண்டு அருகில் சென்றபோது நீண்ட ரிப்பன் போன்ற உடலமைப்புடைய இந்த மீன்கள் ஆழமற்ற நீரில் தத்தளிப்பதை கண்டனர். உடனடியாக அவர்கள், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து அந்த மீன்களை பாதுகாப்பாக மீண்டும் ஆழ்கடலுக்குள் கொண்டு விட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலாகி வருகின்றன. தமிழ்நாட்டில் துடுப்பு மீன் என அழைக்கப்படும் இந்த வகை மீன்கள் கரைக்கு வருவது நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்கான அறிகுறி என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்த மீன்களின் வருகைக்கும் இயற்கை பேரிடர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.