ஐயா... கிணறைக் காணோம்... தனி நபர் ஆக்கிரமிப்பில் மாநகராட்சி கிணறு... மீட்க கோரி பொதுமக்கள் போராட்டம்!
தூத்துக்குடியில் தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி கிணற்றை மீட்க வே்ணடும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 38வது வார்டு ஜெயலானி தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான கிணறு ஆக்கிரமிப்பில் காணாமல் போய்விட்டது. தற்போது அந்த இடத்தில் தனிநபர் கட்டிடப் பணி நடத்தி வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சி சொந்தமான இடத்தில் கட்டப்பட்டு வருகின்ற கடையை இடித்து இந்த இடம் மாநகராட்சி சொந்தமான இடம் என்று உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!