undefined

விடிய விடிய இளம்பெண்கள் பலாத்காரம்... தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது!

 

கடந்த வாரம் திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகளை கடத்திச் சென்றது. இதையடுத்து தாமரைக்குளம் பகுதியில் சிறுமிகளை காதலர்கள் முன்பு கட்டி வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். 4 பேர் சேர்ந்து 2 சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோக்களை வைத்துக்கொண்டு, 'நாங்கள் எப்போது அழைத்தாலும் நீங்கள் எங்கள் இடத்திற்கு வர வேண்டும். இல்லையெனில், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சரண்குமார், வினோத்குமார், சூரிய பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான முக்கியக் குற்ற்வாளி பிரசன்னகுமாரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பிரசன்னகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார் ஆலோசனையின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், வத்தலகுண்டு நான்கு வழிச்சாலை பகுதியில் பிரசன்னகுமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீஸார் அவரை சுற்றி வளைத்து நேற்று மாலை கைது செய்தனர். பொன்மாந்துறை வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் பிரசன்னகுமார் மீது கொலை, தாக்குதல் என 5 வழக்குகள் உள்ளன. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்