சமையலறைக்குள் பதுங்கிய 4 அடி நீள நாகப்பாம்பு... சிவகங்கையில் பரபரப்பு!
Nov 14, 2026, 18:45 IST
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டின் சமையலறைக்குள் பதுங்கியிருந்த சுமார் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் சமையலறையில் நாகப்பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக பாம்பு மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் பணியாளர்கள், சமையலறையில் மறைந்திருந்த பாம்பை கவனமாகப் பிடித்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.வீட்டுக்குள் நாகப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.