SK25.. செம மாஸ்.. இணையத்தை தெறிக்குது சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ மேக்கிங் வீடியோ!
நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், செம மாஸாக நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
அமரன் படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். காஷ்மீர் போர்க்களக் காட்சிகளை தத்ரூபமாக கொண்டுவந்திருப்பதை மேக்கிங் வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், இந்திய தேசத்தின் எல்லையில் இருக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதமாக இந்த மேக்கிங் வீடியோவை சமர்ப்பணம் செய்திருப்பதாக படக்குழுவினர் வீடியோவில் தெரிவித்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா