சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஒருவர் கைது - 4 பேர் மீது வழக்குப்பதிவு!

 

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆலை உரிமையாளர் ஆறுமுகசாமி உட்பட நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆலையில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த ஆலையின் போர்மேன் கணேசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணத்தைக் கண்டறியத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.