’ எஸ்கே 25 ’ புறநானூறு விரைவில் படப்பிடிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாணி அமைத்து நடிப்பில் கலக்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' (எஸ்கே 25) எனும் திரைப்படத்தில் நடிக்கவும் கமிட்டாகி உள்ளார். இந்த திரைப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவியும், நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்டில் இன்று சென்னையில் 'எஸ்கே 25' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!