தென் மாவட்டங்களில் சறுக்கும் தவெக... புது ரூட் எடுக்கும் முதல்வர் விஜய்!

 

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது கட்சிக்குச் சவாலாக உள்ள பகுதிகளில் செல்வாக்கை உயர்த்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தேர்தலில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும், தென்காசி, கன்னியாகுமரி, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, விழுப்புரம் மற்றும் திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஒரு தொகுதியிலும் தவெக வெற்றி பெறவில்லை. மதுரைக்கு அப்பால் கட்சி அமைப்பு ரீதியாக இன்னும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது.

தென் மாவட்டங்களில் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர் மற்றும் நாடார் சமூகங்களின் முழுமையான ஆதரவைத் தன்வசப்படுத்தக் கட்சித் தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

வரவிருக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையும் பட்சத்தில், கட்சி அமைப்பில் சில அதிரடி மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.