எஸ்.எம்.கிருஷ்ணா மரணம்... நாளை கர்நாடகாவில் பொதுவிடுமுறை அறிவிப்பு... சோமனஹள்ளியில் இறுதிசடங்குகள்!
முன்னாள் கர்நாடக முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று டிசம்பர் 10ம் தேதி அதிகாலை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மாண்டியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று டிசம்பர் 10ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திற்கும் தேசத்திற்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் நாளை மாநிலம் தழுவிய பொதுவிடுமுறை அறிவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசியலில் செல்வாக்கு மிக்க நபரான எஸ்.எம். கிருஷ்ணா, கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை முதலமைச்சராகப் பணியாற்றினார். பெங்களூருவை நவீனமயமாக்குவதற்கும், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கர்நாடகா மக்களிடையே கொண்டாடப்பட்டார். மாநிலத்தின் வளர்ச்சியில் அழியாத முத்திரையைப் பதித்த எஸ்.எம்.கிருஷ்ணாவின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிருஷ்ணாவின் பிறந்த ஊரான மாண்டியாவில், இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளை டிசம்பர் 11ம் தேதி காலை மண்டியாவில் உள்ள கிருஷ்ணாவின் சொந்த கிராமமான சோமனஹள்ளியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, அரசு அஞ்சலி செலுத்தப்படும். இதற்கிடையில் கர்நாடகாவின் மிகவும் மரியாதைக்குரிய மாநிலத்தலைவர்களில் ஒருவருக்கு பிரியாவிடை அளிக்க கர்நாடகா அரசு தயாராகி வரும் நிலையில் பலரும் எஸ்.எம்.கிருஷ்ணா உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!