உலக கோப்பைக் கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை... 28 வருட சாதனையைத் தகர்த்தார்!
இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் 28 வருட சாதனையைத் தகர்த்தார்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விசாகப்பட்டினத்தில் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் களமிறங்கி 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்தது. அதில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார்.
இந்த ஆட்டத்தின் மூலம் ஸ்மிருதி மந்தனா உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் 1000 ரன்கள் கடந்த முதல் வீராங்கனையாக அவர் புதிய மைல்கல்லை தொட்டுள்ளார்.
இவர் இதுவரை 18 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள், 3 அரைசதங்களுடன் 1000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய பெருமை சேர்த்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!