சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம்... தமிழக அரசு அறிவிப்பு!

 

 

மறைந்த புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது  

இது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழறிஞர் அய்யா சாலமன் பாப்பையா அவர்களுக்கு அரசு மரியாதை' எனத் குறிப்பிட்டுள்ளார் [ . இன்று காலை 10.30 மணியில் இருந்து 12 மணிக்குள் மதுரை தத்தனேரி மின்மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது . அப்போது காவல்துறை சார்பில் உரிய மரியாதை செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன