தாயின் கண்முன்னே மகன் வெட்டிக்கொலை... சென்னையில் கொடூரம்!
Sep 29, 2026, 09:50 IST
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வீட்டு வாசலில் தாயுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த 28 வயதான அஜித் என்பவர், தனது வீட்டின் வாசலில் தாயார் சரசுவுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் அஜித்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் சரசுவுக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனைத் தகராறில் ஏற்பட்ட முன்விரோதமே இக்கொலைக்குக் காரணம் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தலைமறைவாகியுள்ள ஹரிஷ் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.