undefined

அதிர்ச்சி... தந்தையை கொன்று காவிரியாற்றில் தூக்கி வீசிய மகன்!

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு அருகிலுள்ள கோட்டையூர் பரிசல் துறை பகுதியில் காவிரி ஆற்றில் மிதந்த நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம், பரிசல் துறை அருகே நீரில் பிணம் மிதப்பதை கண்ட உள்ளூர் மக்கள் கொளத்தூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீயணைப்பு வீரர்களுடன் அங்கு சென்று உடலை நீரிலிருந்து கரைக்குக் கொண்டு வந்தனர்.

அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பிணமாக மீட்கப்பட்டவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள கோபிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் (70) என அடையாளம் காணப்பட்டார்.மேலும் சங்கரனுக்கும் அவரது மகன் கோவிந்தராஜுக்கும் இடையே குடும்ப தகராறு நீண்டநாளாக இருந்து வந்ததாகவும், சமீபத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார்கள் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.

இந்த தகராறின் போது கோவிந்தராஜ் ஆத்திரமடைந்து தனது தந்தை சங்கரனை அடித்து கொலை செய்து விட்டு, சடலத்தை காவிரி ஆற்றில் தூக்கி வீசியதாக விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. அங்கிருந்து வெள்ளப்பெருக்கு காரணமாக உடல் இயல்பாக அடித்து வரப்பட்டு மேட்டூர் கோட்டையூர் பரிசல் துறைக்கு கரை ஒதுங்கியதாக போலீசார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூர் போலீசார், தகவலை கர்நாடகாவின் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றிச் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.மாதேஸ்வரன் மலை போலீசார், கொலை வழக்கில் கோவிந்தராஜை குற்றவாளியாக சுட்டிக்காட்டி தேடுதல் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த தந்தை-மகன் சம்பவம் உள்ளூர் பகுதிகளில் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!