சென்னையில் தாய் கண்முன்னே மகன் படுகொலை.. 4 பேர் கைது; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு!

 

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தாயின் கண்முன்னே அஜித் (28) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சின்ன ஹரிஷ், பெரிய ஹரிஷ், போண்டா ராஜேஷ் மற்றும் சஞ்சய் ஆகிய 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிபதி உத்தரவின்படி அவர்களைச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.