undefined

நக்சலைட் போல் நடித்து  தந்தையை மிரட்டி பணம் கேட்ட மகன்!  

 

ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்ட நர்லா பகுதியைச் சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் தினேஷ் அகர்வாலுக்கு சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்தது. அவரது காரில் நக்சலைட் எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர், ரூ.35 லட்சம் வழங்காவிட்டால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டிய கடிதம் ஒன்று கிடைத்தது. இதேபோல் அவரது தொழில் கூட்டாளிக்கும் இதே மாதிரியான கடிதம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தினேஷ் அகர்வால் உடனே நர்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த மிரட்டல் கடிதம் எழுதியது வேறு யாருமல்ல, தினேஷ் அகர்வாலின் 24 வயது மகன் அங்குஷ் அகர்வால் என்பதும் தெரியவந்தது. நக்சலைட் போல் நடித்து தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்தி மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் பல பிழைகளும், நக்சலைட் பெயர்களில் தவறுகளும் இருந்ததாக காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் தேவரகொண்டா தெரிவித்தார். “அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் முதிர்ச்சியற்றதாக இருந்தது. எனவே குடும்பத்துக்குள் உள்ளவரே இதை செய்திருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம்” என்று அவர் கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?