தெற்கு சூடானில் மீண்டும் வெடித்த வன்முறை! அரசு - எதிர்க்கட்சிப் படைகள் மோதலில் 23 பேர் பலி!

 

 

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் அரசுப் படைகளுக்கும் எதிர்க்கட்சிப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

allowfullscreen

தெற்கு சூடானின் வடக்குப் பகுதியில் உள்ள ருவெங் நிர்வாகப் பகுதியில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை சுமார் நான்கு வாரங்களாக மோதல்கள் நீடித்துள்ளன. அதிபர் சல்வா கீரின் அரசுப் படைகளுக்கும், தற்போது தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சாரின் SPLA-IO எதிர்க்கட்சிப் படைகளுக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

ரீக் மச்சாரின் படையினர் அண்டை மாநிலமான யூனிட்டியில் இருந்து ருவெங் பகுதிக்குள் நுழைந்ததாக அப்பகுதி தகவல் துறை அமைச்சர் டோனி சோல் அயாட் தெரிவித்துள்ளார். இந்த மோதலில் 23 பேர் உயிரிழந்ததையும், 17 பேர் காயமடைந்ததையும் இரண்டு காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பொதுமக்கள் வெளியேற்றம் குறித்து அமைச்சர் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகக் கூறியுள்ள நிலையில், காவல்துறை வட்டாரம் ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளது