ஸ்பெயின் ரயில் விபத்து.. இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவிப்பு!

 

ஸ்பெயின் நாட்டின் டோலிடோ மாகாணத்தில்  நடைபெற்ற கோர ரயில் விபத்தைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களுக்கு உதவிகளை வழங்கவும் தகவல்களை அறியவும் இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் - செவில்லே நகரங்களுக்கு இடையேயான அதிவேக ரயில் பாதையில் உர்டா பகுதி அருகே இரு அதிவிரைவு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை பெண்கள் உட்பட 68 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/tQbr0YlPf9s?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/tQbr0YlPf9s/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

விபத்துக்குள்ளான ரயில்களில் பயணித்த இந்தியர்களின் விவரங்களை அறியவும், தேவையான உடனடி அவசர உதவிகளைப் பெறவும் ஸ்பெயினில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ரயில்வே நிறுவனங்கள் சார்பில் பின்வரும் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:

இந்தியத் தூதரக அவசரத் தொடர்பு எண்: +34 650 339 008, மின்னஞ்சல் முகவரி: cons.madrid@mea.gov.in, ரன்ஃபே ரயில்வே உதவி எண்: 900 10 10 20. இரியோ ரயில்வே உதவி எண்: 900 001 403

ஸ்பெயினில் உள்ள இந்தியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்த அவசர எண்களைப் பயன்படுத்தித் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.