இன்று பிஎஃப் குறைகளுக்கு சிறப்பு முகாம்கள்... உடனடி தீர்வு - வாய்ப்பைத் தவற விடாதீங்க!
இன்று ஏப்ரல் 27ம் தேதி, ஈபிஎஃப்ஓ (EPFO) அமைப்பின் சார்பில், பிஎஃப் சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளைக் களைவதற்காக ‘நிதி உங்கள் அருகில்’ என்ற மக்கள் குறைதீர்ப்பு முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க.
இந்த முகாம்கள் சென்னை அண்ணா நகர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மகளிர் கல்லூரி, சென்னை ஈசிஆர் பிவிஆர் ஹெரிடேஜ் வளாகம், முகப்பேர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க வளாகம், காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம், செங்கல்பட்டு - வண்டலூர் பட்டர்ஃபிளை காந்திமதி அப்ளையன்ஸ் லிமிடெட் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் பிஎஃப் கணக்கு தொடர்பான சிக்கல்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள தாமதம் மற்றும் இதர புகார்களுக்குப் பிஎஃப் அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் உடனடித் தீர்வு காண முடியும். எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சந்தாதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.