தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு கைரேகை பதிவு முகாம்!
குடும்ப அட்டைகளில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நாளை சிறப்பு கைரேகை பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள பயனாளிகளின் விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டு, கைரேகை அடிப்படையிலான இ-கேஒய்சி சரிபார்ப்பினை அனைத்துப் பயனாளிகளும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னுரிமை குடும்ப அட்டைகளில் இதுவரை 96.57 சதவீதம் இ-கேஒய்சி பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்தச் சரிபார்ப்புப் பணியை நூறு சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், நாளை வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதுவரை கைரேகை பதிவு செய்ய விடுபட்ட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இந்தச் சிறப்பு முகாமை நேரில் பயன்படுத்தித் தங்களது விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.