நாளை இரவு மானாமதுரை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

 

விநாயகர் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாடிவிட்டுச் சொந்த ஊர்களில் இருந்து திரும்புபவர்களின் வசதிக்காக, மானாமதுரையிலிருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மானாமதுரையிலிருந்து நாளை செப்டம்பர் 14-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இந்தச் சிறப்பு ரயில் புறப்படுகிறது. அதே சமயம் நாளை இரவு 11.55 மணிக்கு இந்த ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட முக்கியமான வழித்தட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.