விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் ... சென்னை - நெல்லை இடையே தெற்கு ரயில்வே அறிவிப்பு!
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 14-ஆம் தேதி இரவு 10.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06152) மறுநாள் காலை 10.15 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும். இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
-
சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 12-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06151) மறுநாள் காலை 11.15 மணிக்குத் திருநெல்வேலியைச் சென்றடையும்.
-
மொத்தம் 23 பெட்டிகளைக் கொண்ட இந்தச் சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.