பயணிகளின் கனிவான கவனத்திற்கு...  மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் !

 

 

 ஆகஸ்ட் மாதத்தில் ரயில்களில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கான்பூர் மற்றும் மதுரை இடையேயும், பிரயாக்ராஜ் மற்றும் திருநெல்வேலி இடையேயும் இரு புதிய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்கள் இயக்கம் மூலமாகத் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதன் மூலம் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்குப் பயண நேரம் குறைவதுடன், பயணமும் மிகவும் வசதியாக அமையும். இதில் கான்பூர் மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழக்கமான ரயில்களில் இருக்கை கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

அதேபோல பிரயாக்ராஜ் மற்றும் திருநெல்வேலி இடையே இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜூலை 31-ம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது பயணத் திட்டங்களுக்கு ஏற்ப இணையதளம் வாயிலாகவோ அல்லது ரயில் நிலையப் பெட்டிகளிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். பண்டிகைக் காலம் மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு இந்த சிறப்பு வசதியை ரயில்வே துறை ஏற்படுத்தியுள்ளது