ஆக்ராவில் வேகமாக சென்ற கார் மோதி விபத்து... 5 பேர் பலி, 2 பேர் காயம்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் நேற்று இரவு ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில் 5 பேர் பலியாகினர். நாக்லா புதிக்கு அருகிலுள்ள நியூ ஆக்ரா காவல் நிலையப் பகுதியில், மிகுந்த வேகத்தில் வந்த கார் சாலையோரத்தில் நின்றிருந்தவர்களை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் கடுமையாக காயமடைந்த ஐந்து பேர் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பாப்லி (33), பானு பிரதாப் (25), கமல் (23), கிரிஷ் (20), மற்றும் பந்தேஷ் (21) ஆகியோர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் ராகுல் மற்றும் கோலு என இருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநர் அன்ஷு குப்தா (40) குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் இவர், தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். சம்பவத்திற்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டு, விபத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!