undefined

ஐப்பசியில் கந்தசஷ்டி, அன்னாபிஷேகம் என ஆன்மிக திருவிழாக்கள்... இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

 

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று அழைக்கிறோம். துலா என்றால் தராசு. வருடத்தில் இந்த ஐப்பசி மாதத்தில் தான் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். ஐப்பசி மாதத்தில் அனைத்து நதிகளும் அதன் நீரில், மனிதர்கள் போக்கிய அனைத்துப் பாவங்களையும் காவிரியில் கரைப்பதாக ஐதிகம். இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் முன்வினைப் பாவங்கள் நீங்கும்.

இந்த மாதத்திற்கு பல்வேறு ஆன்மிக சிறப்புக்கள் உள்ளன. ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளியைக் கொண்டாடி முடித்திருக்கிறோம். அடுத்தடுத்து வர உள்ள விசேஷங்களையும், ஆன்மிக திருவிழாக்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க... 

ஐப்பசி பெளர்ணமி :

ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி திதி விசேஷமானது. மாதந்தோறும் தான் பெளர்ணமி வருகிறது. ஏன் ஐப்பசி மாத பெளர்ணமி விசேஷமானது. ஐப்பசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி நாளில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்படும். நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஐப்பசி சதயம்:

த்ரிஷா, ஐஸ்வர்யா புண்ணியத்தில் பொன்னியின் செல்வன் தமிழகத்தைத் தாண்டியும் பான் இந்தியா படமாக 500 கோடிகளை அள்ளியது. அந்த படத்தின் நாயகன், ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில், பிரகதீஸ்வரர் ஆலம் இன்று வரையிலும் கட்டிட கலைகளுக்கு எல்லாம் உலக நாடுகளுடன் சவால் விடும் வகையில் கம்பீரமாக ஓங்கி நிற்கிறது. கடல் கடந்தும் தனது கொடியை நாட்டிய வீர தமிழன் ராஜ ராஜ சோழன், ஐப்பசி மாதத்தில் வருகின்ற சதயம் நட்சத்திர நாளில் தான் பிறந்தார். ஐப்பசி மாத சதயம் நாள், ஒவ்வொரு வருடமும் அரசு விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

வளர்பிறை ஏகாதசி:

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், வறுமை நீங்கி, பசிப்பிணி அகலும். இப்படி ஐப்பசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினத்தை ‘பாபாங்குசா” என்று அழைக்கிறோம். 

தேய்பிறை ஏகாதசி:

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியில் விரதமிருந்து வழிபட்டால், கர்ம சிரத்தையாக வழிபடுபவர்கள் அவர்களது முன்வினைப் பாவங்கள் நீங்கப் பெறுகிறார்கள். இந்த ஏகாதசி “இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.

கடை முகம்:

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் அனைத்துப் புண்ணிய நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதிகம். வருடம் முழுக்க வாங்கிய பாவங்களை, ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில், அனைத்து நதிகளும் காவிரியில் கரைக்கின்றன. அதனால், இந்த தினத்தில் காவிரி நீராடல் புண்ணியம் சேர்க்கும்.

கந்த சஷ்டி:

ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாக முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!