பாக் நீரிணையில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து - 11 மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை!

 

பாக் நீரிணைப் பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடித்ததாகக் கூறப்படும் 11 இந்திய மீனவர்கள் பயணித்த மீன்பிடிப் படகு பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து இலங்கைச் கடற்பகுதிக்குள் நுழைந்த இந்திய மீன்பிடிப் படகு, நேற்று டெல்ப்ட் தீவு அருகே இருந்த பவளப்பாறையில் தரைதட்டி விபத்துக்குள்ளானது. படகு விபத்தில் சிக்கியதை அடுத்து, அதில் இருந்த 11 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகத் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்தபோது இந்த விபத்து நேரிட்டதாக இலங்கை கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 11 இந்திய மீனவர்கள் மீதும் அடுத்த கட்டச் சட்ட நடைமுறைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.