இன்று ஸ்ரீராம நவமி: 12 ராசிகளுக்கான வழிபாட்டு முறைகள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எது அதிர்ஷ்டம் தரும்?!
ஸ்ரீராம நவமி திருநாளான இன்று, உங்கள் ராசிக்கு ஏற்றபடி ராமபிரானை எவ்வாறு வழிபட்டால் முழுமையான அருளைப் பெறலாம் என தெரிஞ்சுக்கோங்க.
மேஷம் : ராமருக்கு செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும். மனதில் உள்ள பயம் நீங்கி, தைரியம் பிறக்கும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாகும்.
ரிஷபம்: ராமபிரானுக்கு வெள்ளை நிற மலர்கள் (மல்லிகை அல்லது முல்லை) சூட்டி, பாயாசம் நைவேத்தியம் படைக்கவும். குடும்பத்தில் அமைதியும், பொருளாதார ரீதியான வளர்ச்சியும் உண்டாகும்.
மிதுனம் : ராமருக்கு துளசி மாலை அணிவித்து, 'ஸ்ரீராம ராம ராமேதி' ஸ்லோகத்தை 27 முறை உச்சரிக்கவும். ஞாபக சக்தி பெருகும், கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
கடகம் : ராமருக்கு நீர் மோர் மற்றும் பானகம் நைவேத்தியம் படைத்து ஏழைகளுக்குத் தானம் செய்யவும். மன அழுத்தம் குறையும், தாயின் ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்: ராமருக்கு செந்தாமரை மலர் சாற்றி, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றவும். அரசு வழி காரியங்கள் தடையின்றி முடியும், அதிகாரப் பதவிகள் தேடி வரும்.
கன்னி : ராமாயணத்தில் உள்ள 'சுந்தர காண்டம்' பகுதியில் ஒரு சில பக்கங்களை வாசித்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்: ராமருக்கு வெள்ளை ஆடை சமர்ப்பித்து, இனிப்புப் பலகாரங்களை நைவேத்தியம் செய்யவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும், சொத்துச் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம் : சந்திராஷ்டமம் இருப்பதால், அமைதியாக அமர்ந்து 108 முறை 'ஸ்ரீராம ஜெயம்' எழுதவும். தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் சங்கடங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்.
தனுசு: ராமருக்கு மஞ்சள் நிற மலர்கள் சாற்றி, ஏழை எளியவர்களுக்கு வடைப்பருப்பு தானம் செய்யவும். ஆன்மீக ஞானம் பெருகும், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைகூடும்.
மகரம்: ராமபிரானுக்கு நீல நிற மலர்கள் அல்லது கிருஷ்ண துளசி சாற்றி வழிபடவும். தொழில் ரீதியான போட்டிகள் அகலும், புதிய வேலைவாய்ப்புகள் அமையும்.
கும்பம்: ராமருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும். கடன் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும், ஆரோக்கியம் சீராகும்.
மீனம்: ராமருக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும், செல்வம் பெருகும்.
ராசி எதுவாக இருந்தாலும், இன்று மாலை உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ராமர் கோவிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தைத் தரிசிப்பது மகா புண்ணியத்தைத் தரும்.