undefined

நடிகை ஸ்ரீதேவியின் மகள் பெட்ரூமுக்குள் நுழைந்த பாய் பிரெண்ட்... விஷயம் தெரிஞ்சு போனி கபூர் செய்த தரமான சம்பவம்!

 

தனது பெட்ரூமுக்குள் ஒரு முறை தனது பாய் பிரெண்ட்டை ஒளித்து வைத்திருந்ததாகவும், வீட்டில் யாருக்கும் தெரியாமல் வெளியேறுவதற்காக ஜன்னலில் இருந்து கீழே நின்றுக் கொண்டிருந்த எனது காரில் குதித்து வெளியேறச் சொன்னதாகவும் இதை  பின்னாட்களில் தனது தந்தை கண்டுப்பிடித்து விட்டதாகவும் நடிகை ஜான்வி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளும் நடிகருமான ஜான்வி கபூர், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். அவரது பதிவுகளை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து உடனடியாக வைரலாக்கியும் வருகின்றனர். 


கடந்த 2018ல் வெளியான 'தடக்' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜான்வி கபூர், சமீபத்தில், மாஸபிள் இந்தியா யூ-ட்யூப் சேனலுக்கு அளித்திருந்த பேட்டியில், தனது பெட்ரூம் ஜன்னலுக்கு திடீரென தனது தந்தை ஒரு நாள் கம்பிகளை வைத்தார் என்று அதற்கான காரணமாக ஒரு கதையை ரசிகர்களுடன்  பகிர்ந்துள்ளார். இது இப்போது சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வைரலாகி வருகிறது. 
ஒருமுறை நடிகை ஜான்வி, ஒரு பையனுடன் தனது குடும்பத்திற்குத் தெரியாமல் அறைக்குள் பதுங்கியிருந்ததாகவும், அதை அவரது தந்தை போனி கபூர் கண்டுபிடித்ததாகவும் தெரிவித்தார்.
"நான் ஒருமுறை எனது ஆண் நண்பரை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வரவழைத்திருந்தேன். எனது படுக்கையறையில் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். வீட்டிற்கு வெளியே அவன் கிளம்பிச் செல்லும் போது, குடும்ப உறுப்பினர்கள் யாரும் அவனைப் பார்த்து விடக் கூடாது என்பதற்காக அவனை, என் பெட்ரூமின் ஜன்னல் வழியே குதித்து செல்ல சொன்னேன். ஜன்னலுக்கு வெளியே என்னுடைய உயரமான லெக்ஸஸ் கார் சரியாக அதற்கேற்றாற் போல நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் நான் கார் மீது குதித்து, சென்று விடு என்று சொன்னேன். அப்படியே அவனும் யாருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியே கீழே குதித்து சென்று விட்டான்.


அதன் பின்னர் அப்பா அதை சிசிடிவி கேமராவில் பார்த்து விட்டார். அடுத்த நாள், அது குறித்து என்னிடம் எதுவுமே கேட்காமல், எனது அறையில் இருந்து வெளியே யாரும் குதித்து செல்ல முடியாதபடி கிரில் கம்பிகளை வைத்து விட்டார்” என்று ஜான்வி புன்னகையுடன் கூறியுள்ளார். 
எனினும், அந்த நண்பனின் பெயரை நடிகை ஜான்வி வெளியிடவில்லை. திருமணத்திற்கு முன்பு தனது தாயார் ஸ்ரீதேவியைப் பார்க்க அவரது தந்தை போனி கபூர் ஒருமுறை ஹோட்டல் ஒன்றின் ஜன்னல் வழியாக ஏறி அறைக்குள் குதித்ததாகவும் அவர் இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.