ஸ்ரீரங்கம் ஆடிப்பூர உற்சவம் - கோதண்டராமர் திருக்கோலத்தில் ஆண்டாள் நாச்சியார்!

 

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடிப்பூர உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, ஆண்டாள் நாச்சியார் கோதண்டராமர் திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

ஆடிப்பூர விழாவின் தொடர்ச்சியாக இன்று ஆண்டாள் நாச்சியார், வில் மற்றும் அம்பை ஏந்தியபடி கம்பீரமான கோதண்டராமர் திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

ஆண்டாள் நாச்சியாரின் இந்த அபூர்வக் கோலத்தைக் கண்டு வழிபட திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்து, அரங்கனின் தேவியான ஆண்டாளின் அருளைப் பெற்றனர்.