undefined

  ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேரோட்டம்!  

 


108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கத்திலுள்ள அரங்கநாதசுவாமி திருக்கோயில்.  பூலோக வைகுண்டம் என  அழைக்கப்படும்  ஸ்ரீரங்கத்தில்  தை தேரோட்டம் இன்று பிப்ரவரி 10ம் தேதி திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேர் திருவிழா பிப்ரவரி 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4ம் திருநாளான 5 ம் தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவிழாவின் 8ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்தர வீதிகளில் வலம் வந்து ஒய்யாளி கண்டருளுளினார்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு எழுந்தருளினார்.  காலை 5 மணிமுதல் காலை 5.45 மணிவரை ரத ரோஹணம்(மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு உத்தர வீதிகளில் வழியாக நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.நாளை பிப்ரவரி 11ம் தேதி சப்தாவா்ணம் நிகழ்ச்சியும், நிறைவு நாளான பிப்ரவரி 12 ல் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!