‘பேனா சிலை அவசியமா’ என ஸ்டாலின் கேட்டார் - எ.வ.வேலு விளக்கம்!

 

கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாகப் பேனா சிலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் விளக்கிக் கூறியுள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் கடலில் கலைஞர் கருணாநிதியின் பேனா சிலை வைப்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கலைஞர் நினைவாக மெரினா கடலில் பேனா சிலை அமைக்க வேண்டும் என்று இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் தீவிரமாகக் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.

ஆனால், மாநிலத்தின் நிதிநிலைமை சரியாக இல்லாத இத்தகைய சூழலில் பேனா சிலை அமைப்பது அவசியமா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார நிலை முழுமையாகச் சீரடைந்த பிறகு இது குறித்து பரிசீலித்துச் சிலை அமைக்கலாம் என்று கூறி, அந்தத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அவர் விளக்கமளித்தார்.