ஜூலை 15 முதல் 10,000 இடங்களில் உங்கள் ஊரில் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்!
Jun 17, 2025, 12:55 IST
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், மக்களின் குறைகளைப் போக்குவதற்காக முகாம்களை தமிழ்நாடு முழுவதும் அமைத்து அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற போவதாக கூறியுள்ளார்.
அந்த முகாம்கள் ஜூலை 15ம் தேதி முதல் 13-க்கும் மேற்பட்ட அரசுத்துறைகள், 40-க்கும் மேற்பட்ட சேவைகள், கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள், மருத்துவ முகாம்களுடன் தமிழ் நாடெங்கும் 10,000 இடங்களில் “உங்கள் ஊரில், உங்களை தேடிவரும் உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது இணையதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.