தொடரும் அவலம்... தெருநாய்கள் கடித்து 4 ஆடுகள் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பஸ் நிலையம் அருகே வசிக்கும் பழனி (35) என்ற தொழிலாளி விறகு வெட்டும் பணி செய்து வருகிறார். குடும்பத்திற்காக 4 ஆடுகளை வளர்த்து வந்த அவர், அவற்றை வழக்கம்போல் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார்.
ஆனால் நேற்று காலை எழுந்தபோது, அனைத்து ஆடுகளும் படுகாயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தன. நள்ளிரவில் தெருநாய்கள் தாக்கி கடித்ததால் இந்த ஆடுகள் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைத்துறை மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
தெருநாய்கள் தாக்குதலில் 4 ஆடுகளை இழந்ததால் பழனி மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளார். விலங்குகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்களை உடனடியாகப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!