பெற்றோர்களே உஷார்... பள்ளிக்கு நடந்த சென்ற சிறுமி மீது தெரு நாய்கள் திடீர் தாக்குதல்... பகீர் சிசிடிவி காட்சிகள்!
தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமியைத் தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கியுள்ளன. காலையில் வழக்கம்போல அச்சிறுமி தனது வீட்டின் அருகிலுள்ள தெரு வழியாகப் பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த நான்குக்கும் மேற்பட்ட தெருநாய்கள், அந்தச் சிறுமியைச் சூழ்ந்துகொண்டு திடீரெனக் கடித்துக் குதறத் தொடங்கியுள்ளன.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தெருக்களில் பாதுகாப்பற்ற முறையில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.