வெளிச்சத்தின் எல்லை... தமிழகம் முழுவதும் 1 லட்சம் LED தெருவிளக்குகள்  ... முதல்வர் அறிவிப்பு!

 

 

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் LED தெருவிளக்குகள் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கியப் பகுதிகளில் வெளிச்சம் அதிகரிக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் எவ்வித அச்சமுமின்றி இரவு நேரங்களில் பயணிக்கவும், பொதுமக்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்தச் சிறப்புத் திட்டம் விரைவாகச் செயல்படுத்தப்படவுள்ளது